16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்4 குழந்தைகளின் தந்தை கைது

16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த 4 குழந்தைகளின் தந்தை கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-11 19:59 GMT

தென்தாமரைகுளம்,

16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த 4 குழந்தைகளின் தந்தை கைது செய்யப்பட்டார்.

16 வயது சிறுமி கடத்தல்

நெல்லை மாவட்டம் பழவூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சிறுமி வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் மகளை பல இடங்களில் தேடியும் சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே சிறுமியின் பெற்றோர் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தனர். சிறுமி விவகாரம் என்பதால், இந்த புகார் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. இ்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பாலியல் பலாத்காரம்

அப்போது சிறுமியை கலந்தபனையை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 24) என்பவர் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதும், பின்னர் அவரது வீட்டின்அருகேஉள்ள தென்னந்தோப்புக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து இசக்கிமுத்துவை போலீசார் தேடினார்கள். அப்போது அவர் கிடைக்கவில்லை. அவரது செல்போன் எண்ணை வைத்து பார்த்த போது பணகுடி பகுதியில் இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து இசக்கிமுத்துவை, சிறுமியுடன் போலீசார் பிடித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.

கைதான இசக்கிமுத்துவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்