16 வயது சிறுமி கர்ப்பம்
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
கூடலூர்
கூடலூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக வாலிபர் ஒருவர் ஆசைவார்த்தை கூறி உள்ளார். பின்னர் அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பமானார். இதனால் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் இதுகுறித்து கேட்டு உள்ளனர். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்தது குறித்து தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல உதவி அலுவலர் கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை கர்ப்பமாக்கியது கூடலூர் ஏழுமுறம் பகுதியை சேர்ந்த சிவன் (வயது 23) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவ பரிசோதனையில் சிறுமி 9 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்து உள்ளது.