இன்ஸ்டாகிராம் காதலன் பேசாததால் 16 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

இன்ஸ்டாகிராம் காதலன் பேசாததால் சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

Update: 2024-06-02 07:41 GMT

திருச்சி,

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த தம்பதியின் 16 வயதுடைய மகள் கடந்த 2½ ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த வாலிபர், சிறுமியிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அந்த சிறுமி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கரை போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் காதலன் பேசாததால் 16 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்