14 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்

14 வயது சிறுமி 4 மாத கர்ப்பம் ஆனார்.

Update: 2023-09-01 20:17 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியும், 17 வயது சிறுவனும் கடந்த 1 ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த மே மாதம் சிறுவன், தனது காதலியான 14 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து யாரும் இல்லாத போது தாலி கட்டியதாகவும், பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சிறுவன், சிறுமி திருமண விஷயம் இரண்டு வீட்டுக்கு தெரியாத நிலையில் சிறுமியின் உடல் நலத்தில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அப்போது டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊர்நல அலுவலர் விஜயகுமாரி சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்