13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

கோவையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரும்பு கடைக்காரரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-04-06 18:45 GMT

கோவை

கோவையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரும்பு கடைக்காரரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

13 வயது சிறுமி

கோவையை சேர்ந்த 13 வயது சிறுமி 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தந்தை-தாய்க்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சிறுமியின் தாய், தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் 15 நாட்களுக்கு பின்பு கோவை திரும்பினார்.

இருந்தபோதிலும் கணவர் மீது கோபத்தில் இருந்த அவர், தனது கணவர் வீட்டுக்கு செல்லாமல் அருகே உள்ள பெருமாள் என்பவரின் வீட்டில் தனது குழந்தைகளுடன் தங்கினார். 40 வயதான பெருமாளுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இவர் அந்த பகுதியில் இரும்பு கடை நடத்தி வந்தார்.

பாலியல் தொல்லை

இந்த நிலையில் பெருமாள், வீட்டில் இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்து உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், இந்த சம்பவம் குறித்து அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் அந்த சிறுமியிடம் நடத்திய விசாரணையில், பெருமாள், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதை அறிந்த பெருமாள் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்