தூத்துக்குடியில் வீடுமுன்பு நின்ற பெண்ணிடம் 13 பவுன் சங்கிலி பறிப்பு

தூத்துக்குடியில் வீடுமுன்பு நின்ற பெண்ணிடம் 13 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-10-13 18:45 GMT

தூத்துக்குடியில் வீடுமுன்பு நின்ற பெண்ணிடம் 13 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நகை பறிப்பு

தூத்துக்குடி கே.டி.சி.நகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி அமுதா (வயது 55). இவர் நேற்று வீட்டு வாசலில் நின்று பக்கத்து வீட்டில் இருந்தவரிடம் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு மர்மநபர் ஒருவர் கருப்புநிற பேண்ட், சட்டை, முககவசம் அணிந்து வந்து உள்ளார். அவர் அமுதாவிடம் சென்று பேச்சு கொடுத்து உள்ளார். திடீரென அமுதா கழுத்தில் கிடந்த தாலி சங்கிலி உள்பட 13 பவுன் சங்கிலிகளை பறித்துக் கொண்டு மர்மநபர் ஓடியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அமுதா சத்தம் போட்டு உள்ளார். பக்கத்து வீட்டுக்காரர்களும், அக்கம் பக்கத்தினரும் திரண்டு துரத்தியுள்ளனர். ஆனால் மர்மநபர் வேகமாக ஓடி தப்பி சென்று விட்டாராம்.

விசாரணை

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து துணிகர வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபரை தேடிவருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வீடுமுன்பு நின்ற பெண்ணிடம் துணிகரமாக நடந்த இந்த நகை வழிப்பறி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்