மரத்தில் சுற்றியிருந்த 12 அடி நீள மலைப்பாம்பு

மரத்தில் சுற்றியிருந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2023-02-11 20:13 GMT

துவரங்குறிச்சி:

துவரங்குறிச்சி அருகே உள்ள பொன்னம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயியான இவரது தோட்டத்தில் மா மற்றும் பலா மரங்கள் உள்ளன. நேற்று சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று பலா மரத்தின் உச்சிக்கு சென்று கிளையில் சுற்றிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த பெரியசாமி, இது குறித்து துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து அந்த மலைப்பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த மலைப்பாம்பு மரத்தின் கிளையை முழுவதுமாக சுற்றிக்கொண்டு இருந்ததால், அதனை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கிளையை வெட்டி எடுத்து, அதில் சுற்றிக்கொண்டிருந்த மலைப்பாம்பை கருவி மூலம் லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பை வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்