சாலையில் உலா வந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
சாலையில் உலா வந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
துவரங்குறிச்சி:
துவரங்குறிச்சியில் இருந்து அய்யனார் கோவில்பட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக இது குறித்து துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புத்துறை வீரர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அது சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பாம்பை லாவகமாக பிடித்து துவரங்குறிச்சி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.