100 ஆண்டுகள் பழமையான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது

திட்டச்சேரியில் 100 ஆண்டுகள் பழமையான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. இதில் தாய்- மகள் உள்பட மூன்று பேர் உயிர் தப்பினர்.

Update: 2023-09-07 19:15 GMT

திட்டச்சேரியில் 100 ஆண்டுகள் பழமையான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. இதில் தாய்- மகள் உள்பட மூன்று பேர் உயிர் தப்பினர். 

ஓட்டு வீடு

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட புதுத்தெருவில் முகமது காசிம் என்பவருக்கு சொந்தமான 100 ஆண்டுகள் பழமையான ஓட்டு வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டின் முன்பகுதி நேற்று மதியம் திடீரென முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள் இடிபாடுகளில் சிக்கி சேதம் அடைந்தன.

வீடு இடிந்து விழுந்த நேரத்தில் அங்கு இருந்த முகமது காசிம் மனைவி சரியத்துள் நிஷா (வயது49), இவருடைய தாய் மெகர் நிஷா (70), மகள் மெர்சினி (21) ஆகிய 3 பேர் பின் பகுதி வழியாக தப்பி வெளியே ஓடினர்.

உயிர் தப்பினர்

இதன் காரணமாக அவர்கள் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீடு திடீரென இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்