ஆட்டை விழுங்க முயன்ற 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

ஆட்டை விழுங்க முயன்ற 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

Update: 2022-12-21 19:12 GMT

துவரங்குறிச்சி ஸ்டாலின் நகர் அருகே உள்ள முத்துக்குளம் பகுதியில் நேற்று ஆடு ஒன்று சத்தம் போட்டது. இதனையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அதனை பார்த்தபோது, சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஆட்டை இறுக்கிப்பிடித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே இதுபற்றி துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் மலைப்பாம்பு ஆட்டை கொன்றது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதே போல் துவரங்குறிச்சி-மதுரை சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பெட்டியில் இருந்த 8 அடி நீள சாரைபாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்