10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
விக்கிரமசிங்கபுரம் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே வடமலைசமுத்திரம் மெயின்ரோட்டில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்று கொண்டு இருந்தது.
இதை சில இளைஞர்கள் பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாம்பை மீட்டு வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.