கொளத்தூர் அருகே விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 9-வது நாளாக போராட்டம்
கொளத்தூர் அருகே விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 9-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
மேட்டூர்
கொளத்தூர் அடுத்த கண்ணாமூச்சி கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 9-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. விவசாயி மகேஷ் தலைமை தாங்கினார். செல்வராஜ், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சங்கர், துணைத்தலைவர் முத்துசாமி ஆகியோர் பேசினர்.
தமிழக அரசு தென்னை மற்றும் பனைமரத்தில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்ககோரி கள் இறக்க பயன்படுத்தும் மண் சட்டிகளை கையில் ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கொளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செல்வராஜ் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.