9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த தொண்டான்துளசி கிராமத்தில் இருளர் காலனியில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 35). இவரது மனைவி சரளா (34). கூலித் தொழிலாளிகள். இவர்களது மகன் ஜீவாநந்தம் (14) 9-ம் வகுப்பு படித்து வந்தான். ஜீவானந்்தத்திற்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சென்று மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக, அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து லத்தேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.