9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

நாட்டறம்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2023-09-13 17:48 GMT

நாட்டறம்பள்ளி நேரு தெருவில் வசித்து வருபவர் ரமேஷ், நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிருந்தா (வயது 14). அதேப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி வழக்கம் போல் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற பிருந்தா பள்ளி சீருடையில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார்.

வீட்டின் அறைக்குள் சென்ற மகள் வெகு நேரமாக வெளியே வராததால் பெற்றோர் உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் வழக்குப்பதிவுசெய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்