9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

சிதம்பரம் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-10-03 18:45 GMT

சிதம்பரம்:

சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவியை புவனகிரி கோபாலபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் வினோத் (வயது 22) என்பவர் காதலிப்பதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, வினோத்தை கைது செய்து விசாணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்