9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
ஆனைமலை
ஆனைமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் சம்பவத்தன்று தனது வீட்டின் அருகில் உள்ள குழாயில் குடிநீர் பிடித்துக்கொண்டு இருந்தபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த 55 வயது கூலித்தொழிலாளி தகாத முறையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் வீட்டில் இருந்து வெளியே செல்லும்போதெல்லாம் பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அவள், தனது தாயிடம் கூறி அழுதாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அந்த தொழிலாளியை கைது செய்தனர்.