குமரியில் நடந்த குரூப்-2 முதன்மை தேர்வு -998 பேர் எழுதினர்

குமரி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதன்மை தேர்வை 998 பேர் எழுதினர்.

Update: 2023-02-25 18:45 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதன்மை தேர்வை 998 பேர் எழுதினர்.

குரூப்-2 தேர்வு

குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர்கள் உள்பட 5 ஆயிரத்து 446 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.

இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் 21-ந் தேதி நடத்தப்பட்டு தேர்வு முடிவு வெளியானது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அந்த வகையில் முதன்மை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.

998 பேர் எழுதினர்

குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் குரூப்-2 முதன்மைத் தேர்வு 7 மையங்களில் நடந்தது. நாகர்கோவில் டி.வி.டி. பள்ளி, இந்து வித்யாலயா பள்ளி, ஆதர்ஸ் வித்யா கேந்திரா, சி.எஸ்.ஐ. பள்ளி உள்பட 7 மையங்களில் நடந்தது. தேர்வை எழுத 1,071 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 73 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதைத் தொடர்ந்து 998 பேர் தேர்வு எழுதினார்கள்.

முன்னதாக தேர்வு எழுத வந்தவர்கள் பலத்த பரிசோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுத வந்தவர்களுடன் உறவினர்களும் வந்திருந்தனர். அவர்கள் தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்