ரூ.97½ லட்சம் மோசடி

கூடுதல் லாபம் தருவதாக கூறி ரூ.97½ லட்சம் மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவன அதிபர் உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-09-14 17:33 GMT

கூடுதல் லாபம் தருவதாக கூறி ரூ.97½ லட்சம் மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவன அதிபர் உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கூடுதல் லாபம்

காரைக்குடி பாரதி நகரை சேர்ந்தவர் ராமையா (வயது 48). இவருக்கு கடந்த 2000-ம் ஆண்டு ஒருவர் அறிமுகம் ஆனார். அவர் காரைக்குடி நவரத்தின நகரில் இயங்கி வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று கூறினாராம். இதைத் தொடர்ந்து ராமையா தன்னுடைய பணம் மற்றும் அவருக்கு அறிமுக மானவர்களின் பணத்தை சேர்த்து ரூ.97 லட்சத்து 50 ஆயிரத்தை முதலீடு செய்தாராம்.

பணத்தை பெற்று கொண்ட அந்த நிறுவனம் வாங்கிய பணத்தையும் கொடுக்கவில்லை, வட்டியும் தரவில்லை எனக்கூறப்படுகிறது. இது குறித்து ராமையா சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமாரிடம் புகார் செய்தார்.

8 பேர் மீது வழக்கு

அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி விசாரணை நடத்தி நிதி நிறுவனத்தின் உரிமையாளர் ராபர்ட் (60), மணிமேகலை (45), ரூபன் சாமுவேல் (47) உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்