அரியலூர் மாவட்டத்தில் 95.40 சதவீதம் பேர் தேர்ச்சி

அரியலூர் மாவட்டத்தில் 95.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.;

Update:2023-05-20 02:24 IST

95.40 சதவீதம் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை அரியலூர் மாவட்டத்தில் 172 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 79 மாணவர்களும், 4 ஆயிரத்து 781 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 860 பேர் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 748 மாணவர்களும், 4 ஆயிரத்து 658 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 406 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.48 சதவீதமும், மாணவிகள் 97.43 சதவீதமும் என மொத்தம் 95.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

6-வது இடத்தை பிடித்தது

கடந்த 2022-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91.70 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 13-வது இடத்தை பிடித்தது. நடப்பு ஆண்டில் 3.7 சதவீதம் ேதர்ச்சி அதிகரித்து, மாநில அளவில் 7 இடம் முன்னேறி, அரியலூர் மாவட்டம் 6-வது இடத்தை பிடித்துள்ளது. அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் மாநில அளவில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்