சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 93.15 சதவீதம் பேர் தேர்ச்சி

சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 93.15 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2023-05-19 22:48 GMT

பிளஸ்-1 பொதுத்தேர்வு

சேலம் மாவட்டத்தில் 2022-2023-ம் கல்வியாண்டில் 159 அரசு பள்ளிகள், 22 அரசு உதவிபெறும் பள்ளிகள், 142 தனியார் பள்ளிகள் என மொத்தம் 323 பள்ளிகளில் இருந்து 16 ஆயிரத்து 429 மாணவர்கள், 19 ஆயிரத்து 187 மாணவிகள் என மொத்தம் 35 ஆயிரத்து 616 பேர் பிளஸ்-1 தேர்வை எழுதினர். இதில், நேற்று வெளியான பிளஸ்-1 தேர்வு முடிவில், 14 ஆயிரத்து 729 மாணவர்கள், 18 ஆயிரத்து 449 மாணவிகள் என மொத்தம் 33 ஆயிரத்து 178 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.15 சதவீத தேர்ச்சி ஆகும்.

அதாவது, தேர்வு எழுதியவர்களில் 89.65 சதவீத மாணவர்களும், 96.15 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 4.53 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றனர். அதேபோல், அரசு பள்ளிகளை பொறுத்தவரையில் 145 பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 804 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இவர்களில் 16 ஆயிரத்து 9 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.92 ஆகும்.

81 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

மாவட்டத்தில் 8 அரசுப்பள்ளிகள், 4 அரசு உதவிபெறும் பள்ளிகள், 69 தனியார், சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 81 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

பாட வாரியாக 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

தமிழ்-6, ஆங்கிலம்-2, இயற்பியல்-16, வேதியியல்-2, உயிரியல்-3, விலங்கியல்-3, கணினி அறிவியல்-25, கணினி பயன்பாடுகள்-13, வணிகவியல்-9, கணக்கு பதிவியில்-35, வேளாண் அறிவியல்-2, வணிகக் கணிதம்-4, வேலைவாய்ப்பு திறன்கள்-3.

மேலும் செய்திகள்