பிளஸ்-2 பொதுத்தேர்வில் 92.31 சதவீதம் பேர் தேர்ச்சி

நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 92.31 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்றுள்ளனர்.

Update: 2022-06-20 17:54 GMT

நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 92.31 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்றுள்ளனர்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகம் முழுவதும் நேற்று காலை பிளஸ்- 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி நாகை மாவட்டத்தில் வெளியான தேர்வு முடிவுகளை முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் வெளியிட்டார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

நாகை மாவட்டத்தில் 3,022 மாணவர்களும், 3,594 மாணவிகளும் என மொத்தம் 6,616 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 2,700 மாணவர்களும், 3.407 மாணவிகளும் என மொத்தம் 6,107 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் ஆண்கள் 89.34 சதவீதமும், பெண்கள் 94.80 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

92.31 சதவீதம் தேர்ச்சி

நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் மொத்தம் 92.31 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.21 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வேதாரண்யம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு அரசு மேல்நிலைப்பள்ளி, செம்போடை அரசு மேல்நிலைப்பள்ளி, கிழக்கு பஞ்சநதிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, கடினல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி, கருப்பம்புலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

19 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

மேலும் 3 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 10 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 19 பள்ளிகள் நாகை மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்