ரூ.9.13 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டும் பணி

ரூ.9.13 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

Update: 2023-10-14 19:00 GMT

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வல்லநாடு பஞ்சாயத்து அகரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் ரேஷன் கடை கட்டப்பட உள்ளது.

இதற்கான கட்டுமான பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. எம்.சி. சண்முகையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகிருஷ்ணராஜா, அரவிந்தன், ஒன்றிய செயலாளர்கள், பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்