பிளஸ்-2 தேர்வில் 90.05 சதவீதம் தேர்ச்சி

திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 90.05 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2022-06-20 18:08 GMT


திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 90.05 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் கடந்த மாதம் நடந்த பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 6,458 மாணவர்கள், 6,633 மாணவிகள் என 13 ஆயிரத்து 91 பேர் எழுதியிருந்தனர். அவர்களில் 5,541 மாணவர்களும், 6,248 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 789 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 90.05 சதவீதமாகும்.

இதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8,052 மாணவர்கள், 7,759 மாணவிகள் என 15 ஆயிரத்து 811 பேர் எழுதியிருந்தனர். அவர்களில் 5,541 மாணவர்கள், 7,275 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 120 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 89.30 சதவீத தேர்ச்சி ஆகும்.

24-வது இடம்

திருப்பத்தூர் மாவட்டம் பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் 36-வது இடமும், 10-ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் 24-வது இடத்தையும் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்