900 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 900 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

Update: 2022-11-28 21:28 GMT

கொல்லங்கோடு, 

நித்திரவிளை போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ஏலூர்முக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. போலீசார் ஆட்டோவை நிறுத்தும்படி சைகை காட்டினர். போலீசாரை கண்டதும் டிரைவர் ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து போலீசார் ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 25 பிளாஸ்டிக் கேன்களில் 900 லிட்டர் மானிய விலை மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த மண்எண்ணெய்யை கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவுடன் மண்எண்ெணய்யை போலீசார் பறிமுதல் செய்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவை கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்