புனித அன்னாள் செவிலியர் கல்லூரியில் 90 மாணவிகளுக்கு பட்டம்
தூத்துக்குடி புனித அன்னாள் செவிலியர் கல்லூரியில் 90 மாணவிகளுக்கு பட்டங்களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
தூத்துக்குடி புனித அன்னாள் செவிலியர் கல்லூரியில் மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பெங்களூரு அன்னாள் சபை தென்மாநில தலைவி அருள்சகோதரி பவுலின் அகஸ்டின் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு, 90 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்கள்.
விழாவில், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொற்செல்வன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.