பல்லடம் நகராட்சியில் 90 சதவீத வரி வசூலிப்பு

பல்லடம் நகராட்சியில் 90 சதவீத வரி வசூலிப்பு

Update: 2023-03-31 10:29 GMT

பல்லடம், ஏப்.1-

பல்லடம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகளில் வணிக கட்டிடங்கள் - 1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன. இவற்றின் மூலம் பல்லடம் நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.10 கோடி வருவாய் வருகிறது. நகராட்சியில் 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:-

உரிய நேரத்தில் வரியை செலுத்துமாறு மூலம்பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. நகராட்சிக்குச் சொந்தமான வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.மேலும் வரி இனங்களை செலுத்தாத பொதுமக்கள் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து TN URBAN ESEVAI என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும். அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-

Tags:    

மேலும் செய்திகள்