9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் தலைமை ஆசிரியர் கைது

தனது அறைக்கு தண்ணீர் குடிக்க வந்த 9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-16 20:15 GMT

வத்திராயிருப்பு, 

தனது அறைக்கு தண்ணீர் குடிக்க வந்த 9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் கருப்பசாமி (வயது 55) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.

இந்தநிலையில் 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவி, தண்ணீர் குடிப்பதற்காக தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, தலைமை ஆசிரியர் கருப்பசாமி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

தலைமை ஆசிரியர் கைது

மாலையில் வீட்டிற்கு திரும்பிய மாணவி, பள்ளியில் நடந்தது குறித்து பெற்றோரிடம் கூறினாள். இதுகுறித்து மாணவியின் தாய் வத்திராயிருப்பு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் கருப்பசாமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்