அனுமதியின்றி இயங்கிய 9 வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி இயங்கிய 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-07-14 19:57 GMT

சிவகாசி, 

சிவகாசி பகுதியில் அனுமதியின்றி இயங்கும் வாகனங்கள் மீதும், உரிய சாலை வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சிவகாசி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பல்வேறு இடங்களில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் உரிய அனுமதியின்றி இயக்கப்பட்ட 2 பள்ளி வாகனங்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட 3 என்.சி.பி. வாகனம், தகுதி சான்று மற்றும் ஓட்டுனர் உரிமம் இன்றி இயக்கப்பட்ட 2 ஆட்டோக்கள், வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட பயணிகள் வாகனம், தனியார் சேவை வாகனம் என மொத்தம் 9 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் ரூ.61 ஆயிரத்து 100-ஐ அபராத தொகையாகவும், ரூ.91 ஆயிரத்து 600-ஐ வரியாகவும் வசூலிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்