ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை அலுவலர்களின் பயன்பாட்டுக்கு 9 வாகனங்கள்
ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை அலுவலர்களின் பயன்பாட்டுக்கு 9 வாகனங்களை கலெக்டர் வழங்கினார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 9 வாகனங்களை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வாகனங்களின் சாவியை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி செயற்பொறியாளர் பழனிசாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்