புகையிலை பொருட்கள் விற்ற 9 கடைகளுக்கு அபராதம்
நெல்லை தாழையூத்து பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை அருகே தாழையூத்து பகுதிகளில் உள்ள கடைகளில் நெல்லை, தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சசி தீபா, தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை, சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 9 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.