கதண்டுகள் கடித்து 9 பேர் காயம்

கதண்டுகள் கடித்து 9 பேர் காயம் அடைந்தனர்.;

Update: 2023-01-24 18:33 GMT

புதுக்கோட்டை அருகே வெள்ளனூர் பகுதியில் அம்மன்பேட்டை கிராமத்தில் நேற்று பொதுமக்கள் சிலரை கதண்டுகள் கடித்தன. இதில் சிறுவர், சிறுமிகள் உள்பட 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்