சூதாடிய 9 பேர் கைது
திருவேங்கடம் அருகே சூதாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திருவேங்கடம்:
திருவேங்கடம் தாலுகா பெருங்கோட்டூரை அடுத்துள்ள உடப்பங்குளம் கண்மாய் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக திருவேங்கடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர் உத்தரவின்பேரில் திருவேங்கடம் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைலிங்கம் தலைமையில் போலீசார் உடப்பங்குளம் கண்மாய் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது ஒரு கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றது. அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் இதுதொடா்பாக சொக்கம்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 48), சங்கரன்கோவில் திரு.வி.க. தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் கலைச்செல்வன் (30), சிங்கிலிப்பட்டியை சேர்ந்த சுப்பையா பாண்டி (43), சங்கரன்கோவில் அம்பேத்கர்நகர் 1-வது தெருவை சேர்ந்த ஆனந்தன் (39), தேவர்குளம் வீரபுத்திரன் சாமி தெருவை சேர்ந்த வேலுசாமி மகன் மாரி ராசு (37), சங்கரன்கோவில் கக்கன் நகர் 3-வது தெருவை சேர்ந்த பிச்சை (54), சங்கரன்கோவில் எழில்நகரை சேர்ந்த ராமசாமி பாண்டியன் (63), ஆட்கொண்டார்குளத்தை சேர்ந்த கருப்பசாமி (37) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 15 ஆயிரத்தையும் கைப்பற்றினர்.