சூதாடிய 9 பேர் கைது

சூதாடிய 9 பேர் கைது

Update: 2022-12-07 18:45 GMT

ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் விவேகானந்தர்சாலை பகுதியில் பழைய கட்டிடத்தின் பின்பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பணம் வைத்து சூதாடிய ராமநாதபுரம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் (வயது 53), தினேஷ் (31), பாலசுப்பிரமணி (59), கவியரசன் (26), பார்த்திபன் (25), சவுந்திரபாண்டியன் (35), அருண்குமார் (29), பிரபு (30), மகாலிங்கம் (35) ஆகிய 9 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரத்து 700-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்