மாநில நல்லாசிரியர் விருதுக்கு 9 பேர் தேர்வு

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஆசிரியர்கள் இந்த ஆண்டு மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2023-09-03 19:02 GMT

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஆசிரியர்கள் இந்த ஆண்டு மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நல்லாசிரியர் விருது

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந்தேதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம் ஆசிரியர் தினமாக அரசு கொண்டாடி வருகிறது. இதையொட்டி சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் 9 பேர் மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

வேட்டைக்காரன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெபமாலை, நகரகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் அமலநாதன், வேம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் குமார்.

9 பேருக்கு பாராட்டு

காரைக்குடி ஆலங்குடியார் வீதி நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ், திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தேவிகா ராணி, கட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கிரேசியஸ், காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பழனியப்பன், காரைக்குடி இந்திரா நகர் மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலைபட்டதாரி ஆசிரியை பூங்குழலி ஆகிய 9 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது மற்றும் பதக்கம் வழங்கப்படும். விருது பெற்ற ஆசிரியர்களை முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்