சாமி சிலைகளை திருடிய 9 பேர் கைது

சாமி சிலைகளை திருடிய 9 பேர் கைது

Update: 2022-12-22 20:12 GMT

திருச்சிற்றம்பலம் உள்பட 3 இடங்களில் சாமி சிலைகளை திருடிய 9 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

6 சாமி சிலைகள் திருட்டு

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் தொடர்ச்சியாக 3 கோவில்களில் 6 சாமி சிலைகள் திருடு போனது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்விராஜ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த தனிப்படையில் இடம் பெற்று இருந்த பட்டுக்கோட்டை தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் அருண்குமார், ராகவன், இஸ்மாயில், தியாகராஜன், சத்திதானந்தம் ஆகியோர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

9 பேர் கைது

இந்த நிலையில் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஆண்டிக்காட்டை சேர்ந்த சரவணன்(வயது 25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின் பேரில் புதுப்பட்டினம் வேலவன்(25), வெளிவயல் நந்தகுமார்(27), செருபாலக்காடு சபரி(23), பாடுவான்கொல்லை மணியரசு(26), அழகியநாயகிபுரம் வினோத்(27), செல்வகணபதி(24), அமிர்தராஜ்(27), பிரபாகரன்(28) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 6 சாமி சிலைகளை மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்