வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.9 லட்சம் வருவாய்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.9 லட்சம் வருவாய் கிடைத்தது.

Update: 2023-02-07 20:45 GMT

தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்திபெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

இந்த கோவிலில் 3 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, கவுமாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதற்கு இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன் தலைமை தாங்கினார். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தேனி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள், கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

முடிவில் உண்டியல் காணிக்கையாக ரூ.9 லட்சத்து 3 ஆயிரத்து 710 மற்றும் 46 கிராம் தங்கம், 375 கிராம் வெள்ளி கிடைத்தது. இதில் அறநிலையத்துறை ஆய்வாளர் தியாகராஜன், கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, மேலாளர் பாலசுப்பிரமணி, கணக்காளர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்