ரூ.9¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

ரூ.9¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-03-12 20:32 GMT

செம்பட்டு:

தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் குருவிகளாக வரும் சிலர் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருகின்றனர்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம், வெளிநாட்டில் இருந்து பார்சலாக அளிக்கப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

பறிமுதல்

அப்போது சிவகங்கையை சேர்ந்த வெங்கடேஷ்(வயது 37) என்ற பயணி, தனது உடலில் மறைத்து ரூ.9 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான 123 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்து, அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்