வீடு புகுந்து ரூ.9 லட்சம் நகை-பணம் கொள்ளை

உளுந்தூர்பேட்டை அருகே வீடு புகுந்து ரூ.9 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

Update: 2022-11-30 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

கொள்ளை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆதம் மாலிக்(வயது 45). இவர் உளுந்தூர்பேட்டையில் சிமெண்டு சிலாப் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு ஆதம் மாலிக் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் பின் பகுதியில் உள்ள அறையில் படுத்து தூங்கினர். பின்னர் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதம் மாலிக், வீட்டின் மற்றொரு அறையின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 24 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இது குறித்த தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது வீட்டின் அருகில் உள்ள புதருக்குள் திறந்த நிலையில் கிடந்த ஆதாம் மாலிக்குக்கு சொந்தமான சூட்கேஸ் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீ்ட்டின் பீரோ, கதவுகளில் இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். கொள்ளை நடந்த வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்