9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; வாலிபர் கைது
புதுக்கோட்டையில் 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தனிப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மச்சுவாடி பகுதியில் ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதில் 9 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.19 ஆயிரத்து 909 ஆகும். இதனை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கதிரேசனை (வயது 29) பிடித்து கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை கைது செய்தனர்.