9 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

கலசபாக்கம் ஒன்றியத்தில் 9 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை எ.வ.வே.கம்பன் வழங்கினார்

Update: 2022-09-08 13:58 GMT

கலசபாக்கம்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கலசபாக்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லாடவரம், மேலாரணி, ஆதமங்கலம்புதூர் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, மேல்சோழங்குப்பம், கீழ்பாலூர், கடலாடி உள்ிபட 9 அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

லாடவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவிற்கு கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார். அண்ணாதுரை எம்.பி. முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே. கம்பன் கலந்துகொண்டு 115 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சீரிய முயற்சியால் திருவண்ணாமலை மாவட்டத்தை முன்மாதிரியான மாவட்டமாக வளர்ச்சி அடையும் வகையில் பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகின்றனர்.

லாடபுரம் பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று நபார்டு வங்கியின் மூலம் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டித் தர ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய கவுன்சிலர் பிரியங்கா, ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்