விஷ இறைச்சியை தின்ற 9 நாய்கள் சாவு
விஷ இறைச்சியை தின்ற 9 நாய்கள் உயிரிழந்தது.
காரைக்குடி,
சாக்கோட்டை போலீஸ் சரகம் பிரம்புவயல் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 67). இந்நிலையில் காளியப்பனின் ஆட்டை அப்பகுதியில் திரியும் நாய்கள் கடித்ததால் ஆடு இறந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த காளியப்பன் இறந்த ஆட்டின் மீது விவசாயத்திற்கு பயன்படும் பூச்சி மருந்தினை தடவி வீட்டின் அருகே வைத்துள்ளார். அதனை தின்ற அப்பகுதியை சேர்ந்த 9 நாய்கள் இறந்துவிட்டன. இது குறித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் காளியப்பன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.