398 பேருக்கு ரூ.9¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறையில் நடந்த குடியரசு தின விழாவில் 398 பேருக்கு ரூ.9¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்.

Update: 2023-01-26 18:45 GMT

மயிலாடுதுறையில் நடந்த குடியரசு தின விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 398 பேருக்கு ரூ.9 கோடியே 31 லட்சத்து 24 ஆயிரத்து 416 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், உதவி கலெக்டர்கள் யுரேகா, அர்ச்சனா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்