நாகை மாவட்டத்துக்கு 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு 8-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு 8-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாங்கண்ணி பேராலய திருவிழா
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது.
வேளாங்கண்ணி பேராலய பெரிய தேர்பவனி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 8-ந் தேதி(வெள்ளிக்கிழமை) ஆரோக்கிய மாதா பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
உள்ளூர் விடுமுறை
இதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்ய வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.