8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-26 18:40 GMT

திருவாரூர்;

டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை

டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை 2024-ம் ஆண்டுக்கான 8-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 2-ந் தேதி நடக்கிறது. இதில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 2024-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அன்று 11½ வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பம்

விண்ணப்பதாரர் இக்கல்லூரியில் அனுமதிக்கப்படும் போது அவர் 2024 ஜூலை 1-ந் தேதியில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும். இத்தேர்வுக்கான விண்ணப்ப படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பை பெற கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்திய ராணுவக்கல்லூரி, கர்ஷிகாண்ட், டேராடூன், உத்ரகாண்ட், அஞ்சல் குறியீட்டு எண்.248003" (Comandant, RIMC, Dehradun, Uttarakhand. PIN 248003) என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கேட்பு காசோலை

மேலும் கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்திய ராணுவக்கல்லூரி, டேராடூன் அவர்களுக்கு உத்ரகாண்ட், டேராடூன், டெல் பவன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் (வங்கி குறியீடு-1399) ) ("THE COMMANDANT RIMC DEHRADUN", DRAWEE BRANCH, STATE BANK OF INDIA, TEL BHAVAN, DEHRADUN, (BANK CODE-1399), UTTARAKHAND) செலுத்தத்தக்க பொதுப்பிரிவினர் ரூ.600-க்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555-க்கும், கேட்பு காசோலையை அனுப்பி பெற்று கொள்ளலாம்.அல்லது ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியின் வழி (website www.rimc.gov.in) ) மூலமாகவும் உரியதொகையினை செலுத்தி பெற்று கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் (இரட்டையாக) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்காநகர், சென்னை-600003 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். மேலும் விவரங்களை www.rimc.gov.inn என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்