மொபட் மீது லாரி மோதி 8-ம் வகுப்பு மாணவி பலி

செய்யாறு அருகே மொபட் மீது லாரி மோதி 8-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-08-31 15:17 GMT

செய்யாறு

செய்யாறு அருகே மொபட் மீது லாரி மோதி 8-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார்.

லாரி மோதியது

வெம்பாக்கம் தாலுகா ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் இமாம். இவரது மகள் கரிஷ்மா (வயது 14), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவரும், 6-ம் வகுப்பு படித்து வரும் இவரது தம்பி இம்ரான் ஆகிய இருவரும் மொபட்டில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்காக சென்றனர்.

காஞ்சீபுரம் -வெம்பாக்கம் சாலையில் செல்லும்போது எதிரில் வந்த லாரி மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

மாணவி பலி

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரிஷ்மா காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி கரிஷ்மா பரிதாபமாக உயிரிழந்தார். இம்ரான் வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கரிஷ்மாவின் பெரியப்பா சர்தார் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்