திருச்செந்தூர் மணிமண்டபத்தில் 88-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை

திருச்செந்தூர் மணிமண்டபத்தில் 88-வது பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2023-09-24 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிறந்த நாள் விழா

'பத்மஸ்ரீ' டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 88-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், திருச்செந்தூர் தாசில்தார் வாமனன், நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகம்மது,

திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், தினேஷ் கிருஷ்ணா, ஒன்றிய செயலாளர்கள் நவீன்குமார், இளங்கோ, சதீஷ்குமார், கொம்பையா, ஜெயக்கொடி, சுப்பிரமணி, ஒன்றிய பொருளாளர் பரிசமுத்து, நகர செயலாளர்கள் வாள்சுடலை, ஜமீன் சாலமோன், மால்ராஜ், கோபிநாத், சுப்புராஜ், மாவட்ட துணை அமைப்பாளர் சோபியா, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சாரதா மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் வேலம்மாள், சிறுபான்மை பிரிவு தெற்கு மாவட்ட தலைவர் ராஜா ஸ்டாலின், தெற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைப்பாளர் ராஜேந்திரன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி, தொ.மு.ச. பால்ராஜ், இளைஞர் அணி வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதித்தனார் கல்வி நிறுவனம்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் மேலாளர் வெங்கட்ராமராஜன் தலைமையில், மரியாதை செலுத்தப்பட்டது.

கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் ஒய்சிலின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி, சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜீலா, பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆதித்தனார் கல்லூரி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பில் தலைவர் சேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் செயலாளர் சகாய சித்ரா மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட பொருளாளர் அமலிராஜன், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆதிநாராயணன், திருச்செந்தூர் முன்னாள் ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சுரேஷ்பாபு, நகர செயலாளர்கள் மகேந்திரன், ரவிச்சந்திரன், கோபாலகிருஷ்ணன், காயல் மவுலானா, செந்தமிழ் சேகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கோட்டை மணிகண்டன், துணை செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மகாலிங்கம், மாவட்ட பிரதிநிதி ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர், ஆறுமுகநேரி முன்னாள் நகர செயலாளர் கே.கே.அரசகுரு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் குணசேகரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ராஜாநேரு, காயாமொழி கிளை செயலாளர் ராகவ ஆதித்தன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் அஜித்குமார், அதிசயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா

தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வர்த்தக பிரிவு மாநில தலைவர் ராஜகண்ணன், மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம், நகர தலைவர் நவமணிகண்டன், நகர பொதுச்செயலாளர் மீனாட்சி அம்மாள், நகர பொருளாளர் கார்த்திகை கந்தன், ஆன்மிகம் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் வினோத் சுப்பையன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர்கள் சீதாராமன், கல்யாணகுமார், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட துணை தலைவர் பாலாஜி, செய்தி ஊடகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் சரவணன், அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் பா.ஜ.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியசீலன், ஒன்றிய பொருளாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய துணைத்தலைவர் முத்துக்குமார், காயாமொழி கிளை தலைவர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்-விடுதலை சிறுத்தைகள் கட்சி

காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

நகர காங்கிரஸ் தலைவர் முருகேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயந்திநாதன், சண்முகசுந்தரம், லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் டிலைட்டா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் மண்டல செயலாளர் தமிழினியன், மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் வேலவன், வக்கீல் அரிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் பி.ஆர்.மனோகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏரல் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், அம்மன் டி.நாராயணன், மாவட்ட துணை செயலாளர் இல்லங்குடி, நகர செயலாளர்கள் முருகேசன், சக்திவேல், நகர இளைஞரணி செயலாளர் மாரிமுத்து, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் அப்துல்காதர், நகர எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் தமிழ்மணி, வார்டு செயலாளர் குழந்தை உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்து முன்னணி

இந்து முன்னணி சார்பில் மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.

ஒன்றிய செயலாளர் ராஜீவ், நகர தலைவர் முத்துராஜ், நகர செயலாளர்கள் இசக்கிராஜா, முனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உலக திருக்குறள் பேரவை மாவட்ட செயலாளர் அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நாடார் வியாபாரிகள் சங்கம்

திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் காமராசு நாடார் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

செயலாளர் செல்வகுமார், பொருளாளர் ஆசிரியர் செல்வின், துணை தலைவர்கள் பால்வண்ணன், அழகேசன், முருகன், துணை செயலாளர்கள் சத்தியசீலன், பாலமுருகன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், லட்சுமணன், வெங்கடேஷ், கோடீஸ்வரன், தங்ககுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காயாமொழி ஊர்மக்கள்

காயாமொழி ஊர் மக்கள் சார்பில், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வரதராஜ ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராதாகிருஷ்ணன் ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காயாமொழி கூட்டுறவு சங்கம் சார்பில் முன்னாள் தலைவர் தங்கேச ஆதித்தன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. திருநாவுக்கரசு, நாராயணன், பாலாஜி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

தண்டுபத்து தொழில் அதிபர்கள் ரகுராம், சிவராமன், திருச்செந்தூர் வக்கீல்கள் நடேச ஆதித்தன், திலிப்குமார் உள்ளிட்டவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நற்பணி மன்றம்

தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நெல்லை மாவட்ட தலைவரும், திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதி தலைவருமான வள்ளியூர் எஸ்.தர்மர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வக்கீல் சந்திரசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. காயாமொழி நற்பணி மன்ற செயலாளர் முகதும் முகைதீன், ஆயுள்கால உறுப்பினர் அஜித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாம் இந்தியர் கட்சி

நாம் இந்தியர் கட்சி மாநில பொருளாளர் ஜெயகணேஷ் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. மாநில தொழிற்சங்க தலைவர் சரவணகுமார், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் உடையார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், மாவட்ட துணை செயலாளர் சின்னத்துரை, தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் வேல்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ் பெருமாள், ஒன்றிய துணை செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாடார் உறவின்முறை சங்கம்

நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. துணை செயலாளர் பாக்கியராஜா, துணைத்தலைவர் அந்தோணி ஜெயபாண்டி, துணை செயலாளர் மனோகர் மற்றும் தனசேகரன், ஜான்சன், பாஸ்கர், ஜோசப் ராஜ், கோபி, ராகுல் ராஜா, பரமசிவன், கார்த்திக், ராஜேஷ்,

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நெல்லை மாநகர தலைவர் பாக்கியராஜ், மகாலிங்கம், ராமலிங்கம், தனசேகரன், ரூபன், மனோகர், செல்லத்துரை, அன்னை சங்கர், ஜான் சுரேஷ், அந்தோணி ஜெயபாண்டி, வக்கீல் ராஜேஷ், மணி, பிராங்கிளின், கிருஷ்ணன், செந்தில், மாரியப்பன், ஆல்வின் பால், வக்கீல் ஸ்ரீதர் ராஜன், அருள்ராஜ், ராஜேஷ், நிலா கார்த்திக், ராகுல் ராஜா,

கல்லிடைக்குறிச்சி நற்பணி மன்ற தலைவர் முத்துக்குட்டி, நகர செயலாளர் கண்ணன், சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் வேல்முருகன், நெல்லை மாவட்ட துணை செயலாளர் செல்லத்துரை மற்றும் பாலு, டேனியல் டேவிட், மதன்சிங், சங்கரலிங்கம், மேனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், திருச்செந்தூர் நாடார் உறவின்முறை முன்னேற்ற சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கபடி கழகம்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சாதனைகள் குறித்து ஸ்ரீலஸ்ரீ பூமணி சுவாமிகள், லலிதா பூமணி அம்மையார் அறக்கட்டளை தலைவர் சண்முகவேல் எழுதிய நூல் வெளியிடப்பட்டது. இதை ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் வெளியிட, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெயராஜ் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், ராஜேஸ், பாலகுமார் நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அனைத்து சமுதாய மக்கள் நல இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செயலாளர் வெங்கடாசலம், ஒருங்கிணைப்பாளர்கள் அஜித்குமார், செல்வசண்முகசுந்தரம், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் கபடி கழகம் சார்பில் அதன் தலைவர் மணல்மேடு சுரேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் ஒளிமுத்து, செல்வகுமார், ராஜேஷ், வெங்கடேஷ் மணி, முத்துலிங்கம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில்

மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. மாநில அமைப்பாளர் சசிகுமார், மாவட்ட செயற்குழு தலைவர் சசிகுமார், திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் பாலச்சந்திரன், உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்