செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் புதிதாக 860 கணக்குகள் தொடக்கம்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் புதிதாக 860 கணக்குகள் தொடக்கம்.

Update: 2023-02-11 18:45 GMT

ஊட்டி

மத்திய அரசால் கடந்த 2015-ம் ஆண்டு செல்வமகள் சேமிப்பு திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். அதிகபட்சமாக ரூ.1½ லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். செல்வமகள் திட்டத்தில் 7.6 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 2 பெண்களுக்கு மட்டுமே செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இந்த நிலையில் நீலகிரி கோட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையம் மற்றும் தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் வருகிற கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது. எனவே அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்குகளை தொடங்கி பயன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் குன்னூரில் உள்ள 2 தலைமை தபால் நிலையங்கள், 52 துணை தபால் நிலையங்கள், 127 கிராம அஞ்சலகங்களில் மொத்தம் 860 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக நீலகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்