திருவாரூர் மாவட்டத்தில் 86 மாணவர்கள் வெற்றி

திருவாரூர் மாவட்டத்தில் 86 மாணவர்கள் வெற்றி

Update: 2023-04-16 18:45 GMT

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய திறனறிவு தேர்வுகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு தேர்வு இயக்கத்தால் நடத்தப்படும் இத்தேர்வில் வெற்றி பெறுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 55 கல்வி மாவட்டங்களிலும் 6,695 மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 86 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் 28-வது இடமாகும்.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ. ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். அந்த வகையில் 48 மாதங்களுக்கு தலா ரூ. ஆயிரம் வீதம் ரூ.48 ஆயிரம் வழங்கப்படும். இந்தத்தொகை மாணவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். தேசிய திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்