8,500 கேமராக்கள் பொருத்தி குற்றச் சம்பவங்கள் கண்காணிப்பு

மாவட்டம் முழுவதும் 8,500 கேமராக்கள் பொருத்தி குற்றச் சம்பவங்கள் கண்காணிப்பு

Update: 2023-08-02 12:49 GMT

காங்கயம்

காங்கயம், பழையகோட்டை சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் சார்பில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். கூட்டத்தில் அவர் பேசும்போது " பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி தீர்வு பெற்றுத் தரப்படும்.

மேலும் ஆன்லைன் வர்த்தகத்தின் போது அதில் வரும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, ஓடிபி கேட்டு மோசடியில் சிலர் ஈடுபடுகின்றனர். ஆனால் எந்த வங்கியும் இவ்வாறு ஓடிபி எண்ணைக் கேட்பதில்லை. அது போன்ற கும்பல்களை பிடிப்பதில் சிரமம் உள்ளது. எனவே பொதுமக்கள் ஆன்லைன் வர்த்தகம், செயலிகள் பதிவிறக்கம் ஆகியவற்றின் போது பணம் இழக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். குற்றச் சம்பவங்களைத் தடுக்க மாவட்டம் முழுவதும் 8,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகிறோம் என்றார்.

இந்தக் கூட்டத்தில் காங்கயம் காவல் சரக எல்லைக்கு உட்பட்ட காங்கயம், வெள்ளகோவில், ஊதியூர், ஊத்துக்குளி, அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி மக்களிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

-

Tags:    

மேலும் செய்திகள்