வருகிற 4-ந்தேதி நடக்கிறது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 85-வது பட்டமளிப்பு விழா; கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்கிறார்கள்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வருகிற 4-ந்தேதி 85-வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.;

Update: 2023-09-29 18:45 GMT

அண்ணாமலைநகர்

கவர்னர் பட்டம் வழங்குகிறார்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 85-வது பட்டமளிப்பு விழா வருகிற 4-ந்தேதி (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சாஸ்திரி அரங்கில் நடைபெற இருக்கிறது. விழாவுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறார். அண்ணாமலை பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்து கொண்டு விழா பேரூரையாற்றுகிறார்.

சந்திரயான்-3 திட்ட இயக்குனர் பங்கேற்பு

சிறப்பு அழைப்பாளராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) சந்திரயான்-3 திட்ட இயக்குனர் ப.வீரமுத்துவேல் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.

இந்த விழாவில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன், பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல் மற்றும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்